Sunday, August 2, 2015

நண்பா!












நண்பா நண்பா நின்பால் நான்கொண்ட
அன்பால் இப்பா இயற்றினேன் - இதனைக்
கண்பார் -
வம்பாய்ப்பேசி எனைச்சிரிக்க வைத்து
அப்பா அம்மா யாவருமாய் ஆகி - என்
எப்பாவத்தையும் பொறுத்து எனை அடக்கி
நிற்பாய் எனத் தடுத்து - இதனின்று
கற்பாய் எனவுறுத்தி - நம் வாய்மலர்ந்து
செப்பாமொழியும் உணர்ந்திடும்  நம் நட்பு
எப்பாலற்கும் பொருத்தமாய் விளங்கிடும் உறவு
அம்பாள் அருளால் விளைந்த கருவே!