Tuesday, November 20, 2018

Happy birthday Amma!





தாயுந்தன் கண்ணுக்குள் கண்ணாக வளர்ந்திட்ட
சேயெந்தன் சித்தமெல்லாம் சந்தோஷம் பெருகிநின்
வாய்மலர்ந்து உதிர்த்த அமுதங்கள் சுவைத்தபின்
தூய்வடைந்த மனதுடன் வேண்டுகிறேன் - என்றென்றும்
நோயற்ற உடலும் துயரில்லா மனமும்
தோய்வில்லா நிறைவுடன் சகலமும் ரசித்திடுக!
சாய்ராமின் முழுமுதற் தேவதைநீ! எனக்கு
வாய்த்த வரமும்நீயென்றும் வாழிய பல்லாண்டு!