விரலால் வாசித்து மனம்வென்ற நாயகன்துயில்
உரலால் உலுக்கையை அடித்தாற்போல் வரலாறு
காணாத இழப்பினைத் தந்ததால் போனதே
வீணாக இசையின் ஆன்மா!
(உரலால் உலுக்கையை - Intended)
மாண்டலினால் புகழ்கொண்ட ஸ்ரீநிவாசன் வாசிப்பின்
தூண்டலினால் கட்டுண்டோம் - எமதர்மன் தீண்டலினால்
கலையி னுயிர்ப் போனதாலே உலகமொரு
கொலைசெய் யெருமை நரகமே!