விண்ணவர்க்கும் வழிகாட்டும் காரிருள் காந்தன்
கண்ணனின் கீதைபோல் கருத்தொன்று சொல்வேன்கேள்
மண்ணுலகு முழுதும் போற்றிடும் அரி-அரனும்
பெண்ணுலக தெய்வத்தின் அருகினில் குறைவாம் - அவள்
எண்ணங்கள் யாவிலும் பாசமும் ஆசியும்
கொண்டவள் நமையீன்று வளர்த்து வழிகாட்டி
வண்ணமய வாழ்க்கையைத் தந்தென்றும் இன்புறும்
என்னுலக அரசியாம் அன்னையே நீவாழியவே!
No comments:
Post a Comment
Ur opinion My Lord ---->>>>